முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் குடும்ப நிறுவனமாக மாறி விட்டது: அமித்ஷா தாக்கு

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,காங்கிரஸ் கட்சி குடும்ப நிறுவனமாக மாறி விட்டதாகவும் நேரு குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் தலைவர்களுக்கு அவமானமே ஏற்பட்டதாகவும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்திரா காங்கிரஸின் ஆரம்ப காலமான 1978-ம் ஆண்டில் இருந்து நீண்ட ஆண்டுகளுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்தான் காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளனர்.இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப நிறுவனமாக மாறி விட்டது. அரசியல் கட்சியாக பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறி, ஒரு பரம்பரைக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் குடும்பம் செயல்பட்டு வருகிறது.நேரு குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் தலைவர்களுக்கு அவமரியாதையே உண்டானது. நரசிம்மராவ், சீதாராம் கேசரி, பாபு ஜெகஜீவன் ராம், நிஜலிங்கப்பா, காமராசர் போன்ற அக்கட்சியின் தலைவர்கள், நேரு குடும்பத்தினரால் அவமதிப்புக்கு ஆளாகினர். தேபர், ஆச்சார்யா க்ருபாளினி, நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோரும் இதில் அடக்கம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து