முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை விவகாரம்: தடையை மீறி நிலக்கலில் காங்கிரஸ் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

சபரிமலை : கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்கு செல்ல முயன்ற சில இளம்பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். அதை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது. இந்தநிலையில் மண்டல பூஜைக்காக கோயில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. வழிபாடு நடத்த வரும் பக்தர்களுக்கு போலீசார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

கோயில் நடையை இரவு சாத்தி சாவியை ஒப்படைக்க வேண்டும். சன்னிதானத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும். பக்தர்கள் யாரும் இரவு சன்னிதானத்தில் தங்கக் கூடாது என்று போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கு, பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்  போராட்டம் நடத்தினர். சபரிமலையில் பக்தர்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் நேற்று நிலக்கலில் போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் தலைமையில் காங்கிரஸ், கேரள காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். நிலக்கலில் இருந்து பம்பை நோக்கிச் செல்ல முற்பட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போலீஸ் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கினர். பின்னர் நிலக்கலில் இருந்து பம்பை நோக்கி பேரணியாக சென்ற அவர்கள் கேரள அரசை கண்டித்து முழுக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து