முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவி ஏற்பு

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வினீத் கோத்தாரி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு....கர்நாடகா மாநில ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி வினீத் கோத்தாரி, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். நீதிபதி வினீத் கோத்தாரி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், புதிய நீதிபதியை வரவேற்று பேசினார். சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.சுதா, மெட்ராஸ் பார் அசோசியே‌ஷன் செயலாளர் கமலநாதன், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி நளினி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

61ஆக உயர்வு...புதிய நீதிபதி வினீத் கோத்தாரி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், சட்டப்படிப்பை முடித்து 1984ம் ஆண்டு ராஜேஸ்தான் மாநில பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். இவர், அரசியலமைப்புச் சட்டம், கம்பெனி சட்டம், வரிச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். விற்பனை வரி தொடர்பான ஒரு சட்ட இதழில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவில் அனைத்து இளைஞர்களுக்கும் ராணுவ பயிற்சி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘குழந்தை கல்வியும், வறுமையும்’ என்ற தலைப்பில் எழுதிய இவரது கட்டுரையை, முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பாராட்டியுள்ளார். நீதிபதி வினீத் கோத்தாரி பதவி ஏற்றதை தொடர்ந்து, ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 60ல் இருந்து 61ஆக உயர்ந்துள்ளது. காலிப்பணியிடங்கள் 15-ல் இருந்து 14ஆக குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து