முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்மிண்டன்: கால் இறுதியில் சாய்னா, காஷ்யப்

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-14, 21-9 என்ற நேர்செட்டில் சக வீராங்கனை அமோலிகா சிங் சிசோடியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் காஷ்யப் 9-21, 22-20, 21-8 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீரர் பிர்மான் அப்துல்கோலிக்கையும், சாய் பிரனீத் 21-12, 21-10 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரேன் ருஸ்தாவிதோவையும், சமீர் வர்மா 22-20, 21-17 என்ற நேர்செட்டில் சீன வீரர் ஜாவ் ஜன்பெங்கையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து