முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலுக்கு முகே‌ஷ் அம்பானி ரூ.1 கோடியே 11 லட்சம் காணிக்கை

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரிலையன்ஸ் அதிபர் முகே‌ஷ் அம்பானி ரூ.1 கோடியே 11 லட்சத்தை காணிக்கையாக செலுத்தினார்.

சிறப்பு பூஜை

ரிலையன்ஸ் அதிபர் முகே‌ஷ் அம்பானியின் மகள் ஈ‌ஷா அம்பானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்தத் திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுப்பதற்கு முன்பாக, அந்தத் திருமண அழைப்பிதழை திருப்பதி ஏழுமலையானின் பாதத்தில் வைத்து, சிறப்பு பூஜை செய்வதற்காக, ரிலையன்ஸ் அதிபர் முகே‌ஷ் அம்பானி, மகன் அனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன முதன்மை இயக்குனர் பி.எம்.பிரசாத், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் மாதவராவ் ஆகியோர் திருமலைக்கு வந்தனர். அவர்கள், திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி இரவு ஓய்வெடுத்தனர்.

வழிபட்டனர்

இதையடுத்து அதிகாலை கோவிலில் நடந்த அர்ச்சனை சேவையில் முகே‌ஷ் அம்பானி, மகன் அனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மகளின் திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் பாதத்தில் வைத்து, அர்ச்சகர்கள் சிறப்புப் பூஜைகளை செய்து வழங்கினர்.

காணிக்கை

கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் முகே‌ஷ் அம்பானிக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம், டைரி, காலண்டர் ஆகியவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். பின்னர் தங்க விமான கோபுரத்தை வலம் வந்த முகே‌ஷ் அம்பானி, அங்குள்ள பிரதான உண்டியலில் ரூ.1 கோடியே 11 லட்சத்தை காணிக்கையாக செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து