முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரிக்கே சென்று போக்குவரத்து விதிமுறைகளை விளக்கி ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் துவக்கம்

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை- தமிழக அரசின் போக்குவரத்துத் துறை ஆணையர்.ஊ.சமயமுர்த்தி அறிவுரையின்படியும் மதுரை மாவட்ட கலெக்டர் முனைவர் .நடராசன் மற்றும் மதுரை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் முனைவர். . ஆ.ஜெயசங்கரன் வழிகாட்டுதல்களின்படியும் மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கே சென்று மாணவ மாணவியர்களிடையே  சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திஅவ்விடத்திலேயே ஓட்டுநர் பழகுநர் உரிமம் வழங்குவது  மதுரை வலையங்குளம் அருகிலுள்ள  கல்லூரியில் மதுரை மையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் துவக்கி வைக்கப்பட்டது.
ஓட்டுனர் உரிமம்
இந்நிகழ்ச்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் விபத்துக்கள் பற்றிய முழு விபரங்கள் மாணவ மாணவியர்களிடையே மதுரை மைய மோட்டார் வாகன ஆய்வாளர் . க.ஜாஸ்மின்மெர்சி கமலா மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் .கி.கல்யாணக் குமார் ஆகியோர்களால் எடுத்துரைக்கப்பட்டது.மேலும் கல்லூரி துணை முதல்வர் முனைவர்க.அர்ச்சுனன் மற்றும் கல்லூரி தலைவரின் செயல் உதவியாளர் .ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் முன்னிலையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியினை மாணவ மாணவியர்கள் எடுத்துக் கொண்டனர்.அதன்பின்னர் தமிழ்நாடு அரசு பிரச்சார காணொளிக் காட்சி வாகனத்தின் மூலமாக அக்கல்லூரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட சாலை பாதுகாப்பு தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய காணொளிக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.மேலும் இக்கல்லூரியின் அருகில் கடந்த 5 வருடங்களில் சுமார் 12 உயிரிழப்பு சாலை விபத்துக்கள் மற்றும் சுமார் 45 இதர சாலை விபத்துக்கள் நடைபெற்ற வலையங்குளம் ஊரின் (மொத்த மக்கள் தொகை சுமார் 5000 பேர்) முக்கிய இரு இடங்களில் மேற்கண்ட பிரச்சார வாகனம் மூலமாக விபத்துக்கள் நடைபெறும் விதம் மற்றும் அதைத் தடுக்க பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்த குறும்படக் காட்சி ஒன்றரை மணிநேரம் காண்பிக்கப்பட்டு பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து