கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பில் 100 டன் நிவாரண பொருட்கள்

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018      தேனி
30 theni news

தேனி டிச 1 தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கஜா புயலால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியது. இப்பகுதிகளில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேனி மாவட்ட அதிமுக சார்பில் நேற்று 100 டன் அரிசி உள்ளிட்ட  நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமையில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்;த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அபுதாஹீர்,  நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ், போடி பழனிராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, உத்தமபாளையம் பி.ஆர்.பி.அழகுராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ்,  மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்தர், பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிவக்குமார், கே.எம்.எம்.கண்ணன், இளையராஜா, செல்லப்பாண்டி உள்ளிட்டோர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று குழுக்களாக பிரிந்து 19 ஊராட்சி பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து