பாதிரியார்கள் பிரம்மச்சரியத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் - வாடிகன் பிரார்த்தனையில் போப் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      உலகம்
pope francis2018-08-21

வாடிகன் : பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பிரம்மச்சரியத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். வாட்டிகனில் நடந்த சிறப்பு பிராத்தனையில் போப் பிரான்சிஸ் பேசியதாவது,

திருச்சபைகளுக்கு பாதிரியார்களை தேர்வு செய்யும் போது வழிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பிரம்மச்சரியம் மிகவும் முக்கியம். அதை பின்பற்ற முடியாதவர்கள் குருமார் பணிகளில் இருந்து விலகி விடலாம். ஓரினச் சேர்க்கை போன்ற இயற்கைக்கு மாறான விஷயங்கள் ஏற்கத்தக்கதல்ல. ஓரினச்சேர்க்கையாளர் என கூறிக் கொள்வது தற்போது நாகரீகமாகி விட்டது. கன்னியாஸ்திரிகளுக்கும் இந்த கருத்து பொருந்தும். உலகம் தற்போது அமைதியை இழந்து தவிக்கிறது. அமைதிக்கான பணிகளில் திருச்சபைகள், கிளை சபைகள், உறுப்பு அமைப்புகள் ஈடுபடவேண்டும். சிறப்பு பிரார்த்தனைக்குப்பின், பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாசை போப் பிரான்சிஸ் சந்தித்து அப்பகுதி அமைதிக்கு பாடுபடுமாறு வலியுறுத்தியதாக வாடிகன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து