முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. தூதர் பதவிக்கு வெளியுறவு செய்தி தொடர்பாளர் பெயர் அதிபர் டிரம்ப் பரிந்துரைத்தார்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் பதவிக்கு, தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட் பரிந்துரைக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் பதவிக்கு ஹெதர் நாவெர்ட் பெயர் பரிந்துரைக்கப்படும். அவர் மைக்கேல் பாம்பியோவுடன் இணைந்து மிகப்பெரிய பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். திறமையான, புத்திசாலித்தனம் மிகுந்த அவருக்கு இந்த பணி மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராக இருந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி அந்தப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இந்த நிலையில், காலியாகவிருக்கும் அந்தப் பதவிக்கு, ஹெதர் நாவெர்டை அதிபர் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணியாற்றி வந்த ஹெதர் நாவெர்ட், தற்போது வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளராக மட்டுமின்றி, பொதுமக்கள் தொடர்பு மற்றும் விவகாரப் பிரிவின் இடைக்கால இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து