முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாஜ்மகாலின் முக்கிய மார்பிள் கட்டிடத்தை பார்க்க கூடுதலாக ரூ. 200 கட்டணம்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தாஜ்மகாலின் முக்கிய மார்பிள் கட்டிடத்தை காண கூடுதலாக ரூ. 200 கட்டணம் வசூலிக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் முக்கிய உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஷாஜஹான் தன் காதல் மனைவியின் நினைவாக எழுப்பிய வரலாற்று சின்னம் தாஜ்மகால். உலக அதிசயமான இந்த நினைவுச்சின்னத்தின் முக்கிய பகுதி வெள்ளைநிற மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் அடியில் உள்ள ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் சமாதிகளுக்கும் சேதம் ஏற்படுவதாக புகார் இருந்தது. இதனால் தாஜ்மகாலின் முக்கிய கட்டிடத்தின் உள்ளே சென்று காண ரூ.200 கூடுதல் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆக்ராவின் இந்திய தொல்பொருள் ஆய்வத்துறையின் கண்காணிப்பாளரான வசந்த் ஸ்வர்ணகர் கூறும் போது, ஏற்கெனவே செலுத்தப்பட்டு வரும் ரூ. 50-ல் தாஜ்மகால் வளாகத்தில் நுழைந்து அதை தூரத்தில் மட்டுமே பார்க்க முடியும். அருகில் மற்றும் உள்ளே நுழைந்து பார்க்க வேண்டுமானால் இனி மொத்தம் ரூ. 250 செலுத்த வேண்டும். வெளிநாட்டினருக்கு ரூ.1300, சார்க் நாட்டவர்கள் ரூ.340-க்கு பதிலாக ரூ.740 செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து