முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று உலக பேட்மிண்டன் அரையிறுதி சுற்று : தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

குவாங்சோவ் :உலக பேட்மிண்டன் லீக் இறுதிச் சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனையை பிவி.சிந்து அபாரமாக வீழ்த்தி அசத்தினார். இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் தாய்லாந்து வீராங்கனை இன்தானோனை  பி.வி.சிந்து எதிர்கொள்கிறார்.

அபாரமாக...

‘டாப்-8’ வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலக பேட்மிண்டன் லீக் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூயிங்கை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தார். நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் சிந்து, அமெரிக்க வீராங்கனை ஜாங் பீவெனை சந்தித்தார். போட்டி தொடங்கியதும் ஜாங் அதிரடி காட்ட தொடங்கினார். 4-0 என்று முன்னிலைப் பெற்ற ஜாங்கை அபாரமாக எதிர்கொண்டார் பிவி சிந்து. தொடர்ந்து புள்ளிகளை தனதாக்கிய சிந்து முதல் செட்டை தன்வசப்படுத்தினார்.

தவறவில்லை...

2-வது செட்டில் ஜாங் செய்த தவறுகள் அனைத்தையும் தனக்கு புள்ளிகளாக ஆக்குவதில் சிந்து தவறவில்லை. இரண்டாவது செட்டையும் தனதாக்க சிந்துவிற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அமெரிக்க வீராங்கனையை 21-9, 21-15 என்ற செட் கணக்கில் பந்தாடி வெற்றியை தனதாக்கினார். இன்று நடக்கும் அரையிறுதியில் சிந்து, தாய்லாந்து நாட்டின் இன்தானோனை எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து