முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 தொகுதிகளில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தனிப் பெரும்பான்மையுடன் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

ஆனால் கடந்த 4 நாட்களாக அம்மாநில முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வந்தது. சத்தீஸ்கரில் முதல்வர் பதவிக்கான போட்டியில் தம்ராத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகல் மற்றும் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் முக்கிய இடம் பெற்றிருந்தனர்.

மூன்று பேரும் முக்கியமான நபர்கள் என்பதால் யாரை தேர்வது என்று தெரியாமல் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் குழம்பிப் போனது.  அதே போல் உறுப்பினர்கள் ஆதரவும் மூன்று பேருக்கும் கிட்டத்தட்ட சமமாகவே இருந்தது. அங்கு முதல்வரை தேர்வு செய்ய நான்கு முறைக்கும் மேலாக  கூட்டம் நடத்தப்பட்டது.

அதன்பின் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் செய்யப்பட்டது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் முடிவு ஒப்படைக்கப்பட்டது. ராகுல் காந்தி சத்தீஸ்கர் முதல்வரை தேர்வு செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் ராகுல் காந்தி தம்ராத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகல் மற்றும் டி.எஸ்.சிங் தியோ ஆகியோரை அழைத்து இரண்டு முறை சந்திப்பு கூட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் தற்போது சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பதவி ஏற்பது குறித்த தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் 15 வருடத்திற்கு பின் சத்தீஸ்கரில் ஆட்சி செய்ய போகும் காங்கிரஸ் முதல்வர் என்ற பெருமையை பூபேஷ் பாகல் பெறுகிறார். அவரது ஆதரவாளர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து