அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      இந்தியா
nirmala sitharaman-bipin rawat 2018 12 16

புதுரடெல்லி :  பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவு கூறும் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971–ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16–ந் தேதி நாடு முழுவதும் ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் வெற்றியை நினைவு கூறும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த போரில் தங்கள் இன்னுயிரை இழந்த ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதியில், நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதேசமயம், 'வீரர்களின் அசாத்திய துணிச்சலும் தேசபக்தியும் பாகிஸ்தான் போரில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தது. வீரர்களின் சேவை எப்போதும் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும்' என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து