முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் கேட்ரியோனா தேர்வு

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

பாங்காக் : 2018-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வு செய்து மகுடம் சூடியுள்ளார். 2-ம் இடத்தைத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணும், 3-வது இடத்தை வெணிசுலா நாட்டைச் சேர்ந்த பெண்ணும் பெற்றனர்.

2018-ம் ஆண்டுக்கான 67-வது பிரபஞ்ச அழகிப்போட்டி, தாய்லாந்தில் உள்ள நான்தாபுரி மாநிலத்தில் உள்ள முவாங்தாங் எனும் நகரில் நடந்தது. 94 நாடுகளைச் சேர்ந்த 92 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் இந்தியாவில் இருந்து மும்பையைச் சேர்ந்த நேஹல் சுதாஸமா என்ற பெண்ணும் பங்கேற்றிருந்தார். அரையிறுதிச் சுற்றில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து அதாவது அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா பசிபிக் ஆகியவற்றில் இருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இந்தியாவில் இருந்து சென்றிருந்த நேஹெல் சுதாஸமா அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இதில் 2018-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வு செய்து மகுடம் சூட்டப்பட்டார். 2-வது இடத்தைத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டமாரின் கிரீன் பெற்றார். 3-வது இடத்தை வெணிசுலாவின் ஸ்டெபானி கட்டர்ஸ் பெற்றார். 4-வது இடத்தை பியூரிட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த கியாரா ஓர்டேகாவும், 5-வது இடத்தை வியட்நாமின் ஹென் நிஹமும் பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து