நீண்ட கால அரசியலுக்கு உண்மை பேச கற்று கொள்ள வேண்டும்: ராகுலுக்கு ஜெட்லி அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      அரசியல்
arun jaitley 06-10-2018

புது டெல்லி, ரபேல் விமானம் மற்றும் விஜய் மல்லையா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பொய் சொல்லி வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் டி.வி. ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

பிரதமர் மோடி ஆட்சியில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பொருளாதாரம் நல்ல நிலைமையில் தான் உள்ளது. இந்திய பொருளாதாரத்தை தனிமைப்படுத்த யாராலும் முடியாது. உலக பொருளாதாரத்தில் ஒரு அங்கமாகி விட்டது. உலக நாடுகள் சந்திக்கும் சவாலைத்தான், இந்தியாவும் சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயரும் போது, பொருளாதாரம் பாதிக்கிறது. டாலர் பலப்படும்போது, இந்திய ரூபாயில் வீழ்ச்சி காணப்படுகிறது. 2008 சர்வதேச பொருளாதார நிலை இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஐக்கிய முற்போக்க கூட்டணி ஆட்சியின் போது வராக்கடன் ரூ. 8.5 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால், ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் ரூ. 2.5 லட்சம் கோடி எனக் கூறியது. வங்கித் துறையை மத்திய அரசு பலப்படுத்தி வருகிறது. ஜி.எஸ்.டி அமலுக்கு பின்னர் நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அதிகரித்துள்ளது. மல்லையாவுக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கடன் வழங்கப்பட்டது. ரபேல், மல்லையா விவகாரத்தில் ராகுல் பொய் சொல்லி வருகிறார். கோஷ்டி அரசியலில் தான் காங்கிரசுக்கு நம்பிக்கை உள்ளது. நீண்ட கால அரசியலுக்கு ராகுல் உண்மை பேச கற்று கொள்ள வேண்டும். ரபேலில் அரசியல் செய்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து