தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் 24-ல் சென்னையில் நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2018      அரசியல்
Anna in arivalayam 2017-12 31

சென்னை, தி.மு.க. மாவட்டக் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24- ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 24-12-2018 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து