தொண்டர்கள் வழங்கும் மனுக்களை பரீசிலனை செய்து இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்.சிடம் சமர்பிக்க புதிய குழு

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      அரசியல்
eps ops 21-09-2018

சென்னை, அதிமுக தொண்டர்கள் வழங்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சமர்ப்பிக்கும் பணிக்காக புதிய குழுவை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க .ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான. எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு வருமாறு:-

அ.தி.மு.க. - மனுக்கள் குழு

அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து, தெரிவு செய்து உரிய நடவடிக்கைக்காக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடம் சமர்ப்பிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது.

அதன் விபரம் வருமாறு::-
1, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் . கே.பி. முனுசாமி
2, துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், எம்.பி.
3. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் . நத்தம் இரா. விசுவநாதன்
4.அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் மின்துறை அமைச்சருமான . பி. தங்கமணி
5. அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி
ஆகியோர் செயல்படுவார்கள். அ.தி.மு.க.வினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து