முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் முறைகேடு குறித்து கிரிமினல் வழக்கு தொடரப்படும்: ராகுல்

வெள்ளிக்கிழமை, 4 ஜனவரி 2019      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடரப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்ததாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையை சுமுகமாக நடத்த இயலாத நிலை நீடித்து வருகிறது.

நேற்று மக்களவை கூட்டத்தில் இவ்விவகாரத்தை முன் வைத்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின்னர், பாராளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

ரபேல் பேரம் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ள விபரங்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இந்த ஊழல் தொடர்பாக காங்கிரசின் கேள்விக்கு பதில் அளிக்க பயந்து கொண்டு பிரதமர் பாராளுமன்றத்துக்கு வராமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனது குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் தன்னை தனிப்பட்ட முறையில் நிதி அமைச்சர் ஜெட்லி தரக்குறைவாக அவையில் பேசி வருவதற்கும் ராகுல் கண்டனம் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் ரபேல் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடரப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ராகுல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து