முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம், தேனியில் நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ. 1000 விநியோகம்

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      தேனி
Image Unavailable

தேனி -தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க உத்தரவிட்டது. இத்திட்டத்தினை நேற்று முன்தினம் தேனி மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து நேற்று பெரியகுளம் மற்றும் தேனியில் நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூபாய் 1000-ம் விநியோகம் செய்யப்பட்டது. பெரியகுளத்தில் மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜா குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய் 1000-ஐ வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் என்.வி.ராதா, நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், கூட்டுறவு பண்டகசாலை இயக்குநர்கள் அன்பு, காமராஜ், விஷக்குட்டி சேகர், சுந்தர்ராஜ், அப்பாஸ்மந்திரி, துரைப்பாண்டி, தனராஜ், பிரேமா, விஜயலட்சுமி, சாந்தி, கூட்டுறவு கள அலுவலர் மாரிச்சாமி, கூட்டுறவு சார்பதிவாளர் ஹரிஹரன், கூட்டுறவு பணியாளர்கள் சங்க தலைவர் குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேனி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 1000-ஐ  சங்க தலைவர் ஜெயலட்சுமிகணேசன் வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மஞ்சுளாமுருகன், மாவட்ட பதிவாளர் உதயக்குமார், செயலாளர் சிவக்குமார்,  நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்திரன், இணை செயலாளர் கவியரசன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெயக்குமார், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் குருமணி, ராஜகுரு, வீரமணிகர்ணன், ராஜேஸ்வரி, கோவிந்தம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து