முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அமெரிக்கன் கல்லூரி பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை,- மதுரை மாவட்டம், அமெரிக்கன் கல்லூரி மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன், ,  தலைமையில்  நடைபெற்றது.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில்:
  தூக்கிஎறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும் போது, அதன் மூலம் வெளியாகும் நச்சுவாயுவின் மூலமாக மனிதன் மற்றும் உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றும் மாசடைகிறது.  உணவுப் பொருட்களுடன் தூக்கிஎறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பிற உணவுகளுடன் சேர்ந்து உண்ணும் நிலைஏற்படுவதனால், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் உயிரிழப்புக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகிவிடுகிறது.
 மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பலஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை உடையதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாதகாரியம்.  இவ்வாறு நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்பட்டு, மனிதஉயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் தீங்கு விளைவிக்க காரணமாகி விடுகிறது.  எனவே இவற்றை அறவே தவிர்ப்பது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது.
 மேற்படி பாதிப்புகளை கருத்தில் கொண்டும், இந்தத் தீங்கினைநம் எதிர்காலசந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு 2019-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள்  தவிர, தடிமன் வேறுபாடின்றி, இதர மக்காதபிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் ஃ தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தமிழ்நாடு முழுவதும் தடைசெய்ய தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
 எனவே, பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கிஎறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இலை, துணிப்பை, சில்வர் டம்ளர், சணல் பைகள், மண்குவளைகள், பனைஓலை தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.
 தமிழகஅரசின் சார்பில் பிளாஸ்டிக் தடைதொடர்பாக எடுத்துவரப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.  கடைகளில் பிளாஸ்டிக் பையினால் பொருட்களை வழங்கினால் அதனை வாங்க மறுக்கவேண்டும்.
 தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமானது பல்வேறு காலக்கட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்காக உதவி செய்துள்ளது.  அந்த வகையில் தமிழகஅரசு கொண்டுவந்துள்ள பிளாஸ்டிக் தடை உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய முன் வரவேண்டும்.
  எனவே, எதிர்கால சந்ததியினரை காக்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் தடை உத்தரவிற்கு பொதுமக்கள், வணிகர்கள், வர்த்தகசங்கத்தினர் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கி பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகம் உருவாக்க முன்வரவேண்டும்.
    இந்நிகழ்ச்சிகளில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ்சேகர், , , அமெரிக்கன் கல்லூரி முதல்வர்  .தவமணி கிறிஸ்டோபர் , தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் .ஜெகதீஸன் , உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து