ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் விராட் கோலி

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      விளையாட்டு
virat kohli first asian captain 2019 01 07

சிட்னி : ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முதலில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

72 வருடத்திற்கு...

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக சிட்னியில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாகவும், 72 வருடத்திற்குப்பிறகும் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது.

விராட் கோலி...

மேலும் இதுவரை ஆசிய அணிகள் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம்) 29 கேப்டன் தலைமையில் ஆஸ்திரேலியா சென்று விளையாடியுள்ளது. இதில் விராட் கோலி மட்டுமே தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து