இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது நியூசி.

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      விளையாட்டு
NZ made SL whitewash 2019 01 08

நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ராஸ் டெய்லர் (137), ஹென்ரி நிக்கோல்ஸ் (124 அவுட்இல்லை) ஆகியோரின் சதத்தால் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. பின்னர் 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களம் இறங்கியது.

திசாரா பேரேரா 63 பந்தில் 80 ரன்களும், தனுஷ்கா குணதிலகா 31 ரன்களும் எடுக்க இலங்கை 41.4 ஓவரில் 249 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது. ராஸ் டெய்லர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து