ராஜபக்சேவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி தரக் கூடாது - தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      உலகம்
Rajapaksa 2019 01 09

கொழும்பு : இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் சிறிசேனா ராஜபக்சேவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணிலை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் சிறிசேனா. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து  பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேனா உத்தரவிட்டார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் முடிவில் புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

எனவே ரணிலை மீண்டும் பிரதமராக அறிவித்தார் சிறிசேனா. அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை எதிர் கட்சி தலைவராக்கினார். இந்த நிலையில் போதிய உறுப்பினர் இல்லாத ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்றம் கூடியது. அதில் எதிர்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சேவை சபாநாயகர் ஜெயசூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து வழங்குவதாக அவர் விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து