முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்க காங். முயற்சி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்கும் முயற்சியில் காங்கிரஸ் எல்லை மீறி செயல்படுகிறது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

ஆயூஷ்மான் பவா திட்டம்...

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அனைத்து சிகிச்சைகளையும் பெறலாம். ஏழைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அனைத்து சிகிச்சைகளையும் பெறலாம். ஆயூஷ்மான் பவா திட்டம் ஏழை மக்களுக்கும், 1400-க்கும் மேற்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க தொடங்கப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தில் பயனடைந்தவர்களை பிரதமர் உத்தரவின் படி 2 நாட்கள் முன்பு திருச்சியிலும், இன்று (நேற்று) சென்னையிலும் பார்வையிட்டுள்ளேன்.

பொய் பரப்புரை...

2 முறை ஆட்சி செய்த காங்கிரஸ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதா ? 4 மாநில தேர்தல்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் மூலமாகத்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை. ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் பரப்புரை செய்து வருகிறது. நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்கும் முயற்சியில் காங்கிரஸ் எல்லை மீறி செயல்படுகிறது. பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கியதன் மூலம் ஒரு குடும்பத்திற்கே முக்கியத்துவம் தருவது தெரிகிறது. எத்தனையோ தொண்டர்கள் இருக்கும்போது பிரியங்கா காந்திக்கு பதவி அளித்தது குடும்ப ரீதியானது என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து