முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல நூற்றாண்டுகளாக தமிழகம் தொழில் துறையில் சிறந்து விளங்கி வருகிறது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம்

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது என்றும், பல நூற்றாண்டுகளாக தமிழகம் தொழில் துறையில் சிறந்து விளங்கி வருகிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்று நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புகழாரம் சூட்டினார்.

ரூ.2.50 லட்சம் கோடி...

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நேற்று முதல் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தென் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.

பழங்காலத்திலேயே...

பின் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது, தமிழகம் தொழில்துறையில் கடந்த சில ஆண்டுகளாக மட்டும் சிறந்து விளங்கவில்லை. பல நூற்றாண்டுகளாக தமிழகம் தொழில் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. தமிழகம் மாநிலம் கடந்து, ஏன் கடல் கடந்து கூட பல நூற்றாண்டுகளாக வர்த்தகம் செய்து வருகிறது. தமிழர்கள் வர்த்தகத்தில் முன்னோடிகளாக ஒரு காலத்தில் திகழ்ந்தனர். அதை தமிழகம் மீண்டும் நிரூபிக்கும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகத்தில் தமிழகம் பழங்காலத்திலேயே சிறந்து விளங்கியது.

வர்த்தக தொடர்பை...

தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவை தமிழகத்தின் வர்த்தக சிறப்புக்கு பழங்காலம் முதல் தற்போது வரை உதாரணமாக விளங்கும் நகரங்கள். பூம்புகார் துறைமுகம் பல நூற்றாண்டுகளாக தமிழகத்தை பிற நாடுகளுடன் இணைத்திருந்தது.

மின்மிகை மாநிலம்...

அறிவுசார் சொத்து தொடர்பான வர்த்தகத்தில் இந்தியா சிறந்து விளங்குவதாக ஐ.நா. தொடர்புடைய அமைப்புகள் கூறுகின்றன. இந்தியாவின் இ கவர்னன்ஸ் சிஸ்டத்தையும் ஐ.நா. பாராட்டுகிறது. தமிழகம் தற்போது மின் மிகை மாநிலமாக திகழ்வது தொழில்துறையினருக்கு வரப்பிரசாதம். சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. விவசாயம், தொழில்துறை என பலவற்றிலும் தமிழகம் சாதகமான சூழலை கொண்டுள்ளது. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது. தமிழகம் சிறந்த கல்வியின் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்கி வருகிறது. தமிழகத்திற்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து