ரூ.15.39 இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடத்திற்கான பூமி பூஜை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      சிவகங்கை
25 Gooturavupatti boomi pooja photo-

சிவகங்கை -சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கண்டாங்கிப்பட்டி ஊராட்சி, கூட்டுறவுப்பட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  .ஜி.பாஸ்கரன்   தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் கூட்டுறவுப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15.39 இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
இதயதெய்வம் புரட்சித்தலைவர் அம்மா கிராமங்கள் பொருளாதாரம் முன்னேற்றம் பெற எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கிய முதல்வராவார். அவருக்கு பின் அவர் வழியில் ஆட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்,   தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருவதுடன் வறுமையிலுள்ளவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடும் தலைவர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும்விதமாக ஒவ்வொரு கிராமந்தோறும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று இந்தக் கிராமத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்படுகின்றன. இதுபோன்ற கட்டிடம் கிராம வளர்ச்சிக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக சுயஉதவிக் குழுக்கள் மகளிர் திட்டத்தின் மூலம் தொழிற் பயிற்சி பெறுவதற்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் மகளிர் குழு மூலம் சுழல்நிதி கடன் பெற்று சுயதொழில் துவங்க இதுபோன்ற பயிற்சி கட்டிடங்கள் பயன்பெறும். கிராமப் பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் இதுபோன்ற பல்நோக்கு கட்டிடங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
       பின்னர் நாலுகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமச்சபைக் கூட்டத்தில் மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டததுடன், மேலும் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப திட்டங்களை பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள முன்வரவேண்டும். அமைச்சர் என்கிற முறையில் என்னை எப்பொழுது வேண்டுமானாலும் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். அதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் மகளிர் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. பெண்கள் குழு அமைத்து தேவையான தொழிற் பயிற்சி பெற்று சுயதொழில் துவங்க வேண்டும். தொழில் துவங்க தேவையான பயிற்சி மற்றும் வங்கிக் கடன் மகளிர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கிராமப்பகுதிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் பல்வேறு திட்டங்கள் வழங்கும் நிலையில் பொதுமக்களாகிய நீங்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
     இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வடிவேல், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ்,ரஞ்சனினதேவி, பொறியாளர் ராஜா, கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் சசிக்குமார், பாண்டி, ஜெயப்பிரகாஷ்,  அய்யனார்,  பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து