சபரிமலை கோவில் நடை வரும் 12 - ம் தேதி திறப்பு - பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      ஆன்மிகம்
SABARIMALA 2018 11 29

திருவனந்தபுரம் : சபரிமலை கோவில் நடை வரும் 12 - ம் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

சபரிமலை  ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 5.30 மணிக்கு மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கோவில் மீண்டும் திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 5 நாட்களுக்கு பல்வேறு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். வருகிற 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

ஏற்கனவே சபரிமலை கோவில் நடை திறந்து இருந்தபோது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுபோல இந்த முறையும் தடை உத்தரவு பிறப்பிப்பது பற்றி பத்தனம் திட்டா கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது.

பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் ஐயப்ப பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கும்போது பக்தர்கள் அமைதியாக சென்று வழிபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 12-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை காலை 10 மணிக்கு மேல்தான் நிலக்கல்லில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் கட்டுப்பாடுகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து