மிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      ஆன்மிகம்
rahu move mithuna zodiac 2019 02 13

திருநாகேஸ்வரம் : கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ராகு இடம்பெயர்ந்ததை அடுத்து நேற்று பக்தர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சிறப்பு பூஜைகள்

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுவது வழக்கும். அதன்படி நேற்று கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ராகு இடம்பெயர்ந்துள்ளார். சரியாக நேற்று மதியம் 1.24 மணிக்கு மிதுனத்திற்கு ராகு இடம்பெயர்ந்தார். ராகு பெயர்ச்சியையொட்டி, ராகு ஸ்தலமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம்  நாகநாத ஸ்வாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பக்தர்கள் வழிபாடு

பால் உள்ளிட்ட திரவங்களால் அபிஷேகமும் செய்யப்பட்டது. ராகு பகவானுக்கு ஆராதனையும் செய்யப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல மகரத்தில் இருக்கும் கேது, தனுசு ராசிக்கு நேற்று பிற்பகல் 2.04 மணிக்குப் பெயர்ச்சி அடைந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து