முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உசிலம்பட்டியில் மாசித் திருவிழா

புதன்கிழமை, 6 மார்ச் 2019      மதுரை
Image Unavailable

உசிலம்பட்டி -   பெரியபூசாரி தலைமையில் எட்டும் இரண்டும் பத்துத்தேவர், 5 பூசாரிகளும், அய்யனார்குளம் அக்கா மக்கள் ஆகியோர் கலந்து கொண்ட  பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவில் சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. உசிலம்பட்டி கருப்பு கோவிலில் இருந்து சாமியின்.ஆபரணங்களும், பூஜை பொருள்கள் அடங்கிய பெட்டி தூக்கும் விழா நடந்தது. பூசாரிகளும் கோடாங்கிகளும் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி, அன்னம்பார்பட்டி, வடகாட்டுப்பட்டி, மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, இஸ்மாயில் மடம், இளந்தோப்பு, கொப்பிலிபட்டி வழியாக பாப்பாபட்டி பெரிய கோவிலுக்கு பெட்டி எடுத்துச் செல்லப்பட்டது. நள்ளிரவு வரை பூஜைகள் நடந்தன. 10 ஊர் பூசாரிகள் சார்பில் அந்தந்த ஊர்களில் இருந்து பூஜை பொருட்கள் அடங்கிய பெட்டியும், சீர்வரிசை பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.
      பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் விழாவில் 10 ஊர் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவை ஒட்டி பல கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது. வடகாட்டுப்பட்டியில் வைக்கப் பட்டிருந்த பெட்டிகள் மிகப் பெரிய
ஊர்வலத்துடன் உசிலம்பட்டி கருப்பு கோவிலுக்கு வந்தடைந்தது. ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தில் ஆரவாரத்துடன் கலந்து கொண்டனர்.
  உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள ஆண்டிபட்டி, வத்தலகுண்டு, பேரையூர், செக்காணூரணி பகுதிகளில் இருந்தும், கிராமங்களில் இருந்தும், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும்  ஏராளமான பக்தர்கள் குலதெய்வ வழிபாட்டிற்காக உசிலம்பட்டியை நோக்கி படையெடுத்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் பேருந்துகள் உசிலம்பட்டி சாலைகளில் நிரம்பி இருந்தது. மாசித் திருவிழாவிற்கு ஈடுகொடுக்க முடியாத அளவிற்கு சாலைகள் குறுகலாக உள்ளது.  வெகு சீக்கிரமே உசிலம்பட்டியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். பல்லாயிரக் கணக்கான வாகனங்களும் லட்சக் கணக்கான பக்தர்களும் கூடும் உசிலம்பட்டிக்கு போக்குவரத்து மாற்றம் செய்யும் அளவிற்கு சாலை வசதி தேவை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து