அந்தமானில் நிலநடுக்கம் 4.8 ஆக ரிக்டரில் பதிவு

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      உலகம்
earthquake 2018 12 24

அந்தமான், அந்தமான் தீவுகளில் காலை 6.44 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகளில் கடும் அதிர்வு ஏற்பட்டதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இல்லை. கடைகள், வணிக நிறுவனங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து