முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் நடத்தைவிதிமுறைகள் ராமநாதபுரம் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் விளக்கம்

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல்-2019 தொடர்பான அறிவிப்பினை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்காளர் சுருக்கத் திருத்தம்-2019 அடிப்படையிலான  இறுதி வாக்காளர் பட்டியல் 31.01.2019 அன்று வெளியிடப்பட்டது.  இப்பட்டியலின்படி, மாவட்டத்தில் 784 இடங்களில் 1,316 வாக்குச்சாவடி மையங்களும், ஆண் வாக்காளர்கள் 5,60,173 பெண் வாக்காளர்கள் 5,62,347 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 69 ஆக மொத்தம் 11,22,589 நபர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.  மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 9226 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் வாக்கு அளிப்பதற்கு ஏதுவாக வாக்காளர் பட்டியலில் தனியாக குறியீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
 இதுதவிர, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு 1,09,092 ஆண் வாக்காளர்கள், 1,10,296 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 2,19,390 வாக்காளர்களும், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு 1,03,771 ஆண் வாக்காளர்கள், 1,07,000 பெண் வாக்காளர்கள், 11 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 2,10,728 வாக்காளர்களும் உள்ளனர்.
 அதன்படி, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 31.01.2019 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 1,916 வாக்குச்சாவடி மைங்களும், 7,73,036 ஆண் வாக்காளர்களும், 7,79,643 பெண் வாக்காளர்களும், 82 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 15,52,761 வாக்காளர்கள் உள்ளனர்.  மேலும், 31.01.2019 தொடங்கி இதுநாள் வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றம் செய்தல் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல்-2019-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
 மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்தவரையில் மொத்தம் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரம் வரப்பெற்று கடந்த 03.10.2018 முதல் 10.10.2018 வரை முதல் நிலை சரிபார்த்தல் நடத்தப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் மேற்படி அனைத்து வாக்குப்பதிவு இயந்;திரம்  மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரம் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
 தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டு, அனைத்தும் 09.03.2019 முதல் முதனிலை சரிபார்த்தல் நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2019-ல் பயன்படுத்தவுள்ள குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி கடந்த 09.02.2019 முதல் 13.02.2019 வரை குறித்து விழிப்புணர்வு முகாம்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலிருந்து ஆகியவை எடுக்கப்பட்டுள்ளது.  அதில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்காக நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 28 குழுக்களுக்கு மொத்தம்  வழங்கப்பட்டது.  மீதமுள்ளவை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
 பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2019ற்காக பறக்கும் படை, ஒரு சட்டமன்ற தொகுதி மூன்று வீதம் மொத்தம் 12 குழுக்களும், குழுக்களும், குழுக்களும் குழுவும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று வீதம் அமைக்கப்பட்டுள்ளது.  மொத்தம் பாராளுமன்ற தேர்தலுக்காக 17நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மேலும் பொதுமக்கள் தங்களது தேர்தல் தொடர்பான விளக்கங்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக        1950 உதவிக்கான  சேவை தொடங்கப்பட்டு, இதுவரை 780 அழைப்புகள் வரப்பெற்று குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
 தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் 18.04.2019 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்திட அறிவிக்கப்பட்டுள்ளது.  வேட்பு மனு தாக்கல் 19.03.2019 முதல் 26.03.2019 வரையிலும், வேட்பு மனு பரிசீலனை 27.03.2019 தேதியன்றும், வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் 29.03.2019 அன்றும், வாக்குப்பதிவு நாள் 18.04.2019 அன்றும், வாக்கு எண்ணிக்கை 23.05.2019 அன்றும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் மாதிரி நன்னடத்தை  விதிமுறைகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.எஸ்.எஸ்.கண்ணபிரான், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரு.ஆர்.சுமன், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் க.கயல்விழி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.எஸ்.சேக் அப்துல்லா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து