வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      ராமநாதபுரம்
12 ELECTION MOCK POLL

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்யும் விதமாக ‘மாதிரி வாக்குப்பதிவு” நடைபெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல்-2019 பணிகளில் பயன்படுத்துவதற்காக மொத்தம் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரம்  வரப்பெற்று கடந்த 03.10.2018 முதல் 10.10.2018 வரை முதல் நிலை சரிபார்த்தல் நடத்தப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரம்  ஆகியவற்றின் செயல்திறனை உறுதி செய்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 09.03.2019 முதல் முதனிலை சரிபார்த்தல்  நடைபெற்றது.  இந்நிலையில், கூடுதலாக வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்த்தல் நிறைவேற்றப்பட்டதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் விருப்பப்படி தேர்வு செய்யப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்  பதிவான வாக்குகள் எண்ணிக்கை மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை குறித்தும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 
முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட கலெக்டர் வீரராவராவ் கலெக்டர்  அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தின் செயல்பாடு குறித்து நேரிடையாகச் சென்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முதல்பரிசோதனை பொறுப்பு அலுவலர் (உதவி ஆணையர், கலால்) சி.ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து