ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் - தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

புதன்கிழமை, 13 மார்ச் 2019      தமிழகம்
Sathyapriya Sahu 2018 9 1

சென்னை : ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

தேர்தல் தேதியன்று மதுரை சித்திரைத் திருவிழா நடப்பதால் ஏற்படும் சிக்கல் குறித்து மதுரை மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை வந்தவுடன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம். பின்னர் இது மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு அளிக்கப்படும். 3 சட்டமன்றத் தொகுதிகளின் வழக்குவிவரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு (நேற்று) அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட ஆட்சியர்கள் ) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

ரூ.1 கோடி 87லட்சம்...

தி.மு.க. சார்பில் உளவுப் பிரிவு அதிகாரிகளை மாற்றவேண்டும் என்று அளிக்கப்பட்டு மனுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். இதுவரை 702 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வீடியோ குழுவினர் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் வீடியோ வீவர்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து நேற்று மட்டும் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 92 லட்சம் 49ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஊட்டியில் ரூ.73.5லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 1 கோடி 87லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உரிய ஆவணம்...

இதில் ஊட்டியில் 73 லட்சத்து 05 ரூபாய் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல கடலூரில் 11 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான பணம் பரிவர்தனை நடைபெற்றால் தகவல், தெரிவிக்க வங்கிகளுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்து மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் இதனை வருமானவரித்துறை ஆய்வுசெய்து குழுவுக்கு அனுப்பும். தனி நபர் ரூ.50 ஆயிரம் வரையில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. 50 ஆயிரத்திற்கு அதிகமாக யார் கொண்டு சென்றாலும் அதற்கு உரிய ஆவணம் இருக்கவேண்டும். இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். நட்சத்திர வேட்பாளர் ரூ.1லட்சம் வரை வைத்துக்கொள்ளலாம்.

1,312 வழக்குகள்...

உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 3,479 ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிமத்தை நீடிப்பு செய்யாத 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 துப்பாக்கிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 1,312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுல்காந்தி இன்றைய தினம் கல்லுாரி மாணவர்கள் மத்தியில் பேசியது தேர்தல் விதிமீறல் ஆகாது என்றும், முன் அனுமதி பெற்று நடத்துவதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து