பேலன்ஸ் ஜீரோ காட்டியதால் ஏ.டி.எம். மையத்தில் பெண்ணிடம் பறித்த பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      உலகம்
atm thief 2019 03 14

பீஜிங் : சீனாவில் ஏ.டி.எம். மையத்தில் பெண்ணிடம் இருந்து பறித்த பணத்தை, அந்த வாலிபர் மீண்டும் திருப்பி கொடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றது.

சீனாவின் ஹூயிங் நகரில் உள்ள ஏ.டி.எம்.மில் இருந்து பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக கார்டைப் போட்டு பின் எண்ணை அழுத்தியுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பணம் எடுக்க வந்ததை போல ஒருவன் பின்னே வந்து நின்றான். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டவே அந்த பெண் பயந்து கத்தியுள்ளார். பின்னர் இயந்திரத்தில் இருந்து வந்த பணத்தை எடுத்து அந்த திருடனிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய திருடன், ஏ.டி.எம். இயந்திரத்தில் அப்பெண்ணின் பேலன்ஸை பார்த்துள்ளான். அதில் ஜீரோ பேலன்ஸ் காட்டவே, அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு அப்பெண்ணை பார்த்து சிரித்து விட்டுச் சென்றான். இந்த காட்சி ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு தரப்பினரும் அவனுக்கு பாராட்டு தெரிவித்த போதிலும் அந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து