அரசியலில் இருந்து ஓய்வு தேவகவுடா அறிவிப்பு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      இந்தியா
Deve Gowda 2019 02 23

பெங்களூரு, அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதால் தேர்தலில் இனி போட்டியிடப் போவதில்லை என்று தேவகவுடா கூறி உள்ளார்.

கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி உள்ளார். இவர் முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் மகன். மாண்டியாவில், தேவகவுடாவின் பேரனும் குமாரசாமியின் மகனுமான நிகில் போட்டியிடுகிறார். ஹசன் தொகுதியில் தேவகவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தேவகவுடா பேசும் போது, நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். எந்த தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் . ஹசன் தொகுதியில் என் பேரன் பிரஜ்வால் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என்றார். பேரன் பிரஜ்வாலுக்காக வாக்கு கேட்ட போது, தேவகவுடா கண்கலங்கினார்.

தேவகவுடா கண்ணீர் வடித்து நாடகம் நடத்தி எல்லாரையும் ஏமாற்றுகிறார். அது அவர்களுக்கு புதியது அல்ல. தேர்தலுக்கு முன் தேவகவுடா குடும்பம் கண்ணீர் வடிக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு, இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள், கண்ணீர் விட்டு அழுகின்றனர் என்று ஜனதா தளத்தையும் தேவகவுடாவையும் பா.ஜ.க. விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து