முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுய விளம்பரத்திற்காக ரூ. 3044 கோடி செலவு செய்த பிரதமர் நரேந்திர மோடி - மாயாவதி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : பிரதமர் மோடி ரூ. 3044 கோடி செலவிட்டு சுய விளம்பரம் தேடி வருவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், பா.ஜ.க.வையும், மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். வறுமை மற்றும் வேலையின்மையை போக்க தவறிய பா.ஜ.க அரசு, தனது தோல்விகளை மறைத்து தேர்தலுக்காக மக்களை திசை திருப்பும் வகையில் முடிந்து போன பழைய பிரச்சனைகளை மீண்டும் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரதமர் மோடி தனது சுய விளம்பரத்திற்காக அடிக்கல் நாட்டுவது போன்ற விழாக்களுக்கு ரூ. 3044 கோடி செலவிட்டுள்ளார்.  உத்தரபிரதேசத்தில் பின்தங்கி இருக்கும் கிராமங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றிற்கு அரசின் பணம் செலவிடப்பட வேண்டும். ஆனால், பா.ஜ.க. அரசு தங்கள் கட்சியின் விளம்பரத்திற்கு செலவிடுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இவ்வாறு மாயாவதி அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து