முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது இடத்திற்கு டோனியை இறக்குவதே சரியாக இருக்கும் - முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே அறிவுரை

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாட்டில் திருப்தி இல்லை, அதனால் டோனியை இந்த இடத்தில் இறக்குவதுதான் நல்லது என சுழல் ஜாம்பவானும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே அறிவுரை கூறியுள்ளார்.

அணி தேர்வில்...

2019-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து நாட்டு அணிகளும் தங்களது அணியை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்திய அணியைப் பொறுத்தவரை, இன்னும் நிலையான அணி இறுதி செய்யப்பட்டதாக தெரியவில்லை.

இந்தியா தோல்வி

உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பு, இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியா உடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில், 2-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி நிலையாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்திய அணியில் 4-வது இடத்தில் எந்த வீரரை களமிறக்குவது என்ற குழப்பம் தீர்ந்தபாடில்லை.

கடந்த ஒரு சில ஆண்டுகளில் ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, யுவராஜ் சிங், ரஹானே, அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட், விஜய் சங்கர் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் சோதனை முயற்சியில் களமிறக்கப்பட்டனர். இதுவரை யாரும் அந்த இடத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

4-வது இடத்திற்கு...

இந்நிலையில், சுழல் ஜாம்பவானும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, 4-வது இடத்திற்கு சரியான வீரர் யார் என தெரிவித்துள்ளார். “கடந்த இரு ஆண்டுகளில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது முதல் மூன்று பேட்ஸ்மேன்கள்தான். அதனால், 4-வது இடத்தில் டோனி களமிறங்க வேண்டும். 5-வது, 6-வது மற்றும் 7-வது இடத்திற்கு வேறு யார் களமிறங்கலாம் என பார்க்க வேண்டும்” என்று கும்ப்ளே அறிவுரை கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து