முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன தலைவர் ரஹிமோவ் திடீர் ராஜினாமா

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

பெய்ஜிங் : குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன தலைவர் கபூர் ரஹிமோவ் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குற்றச்சாட்டு

சர்வதேச குத்துச்சடை சம்மேளனத்தின் தலைவரான கபூர் ரஹிமோவ், திட்டமிடப்பட்ட குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அவர் கடந்த நவம்பர் மாதம், தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பே, இந்த பிரச்சனையை தீர்க்கும்படி சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கூறியது. ஆனால், பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் 2020ல் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை போட்டிகளை முடக்கி வைக்க சர்வதேச ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

ராஜினாமா

வரும் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன தலைவர் கபூர் ரஹிமோவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.

பொய் காரணம்...

“என் மீதான குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை. அரசியல் உந்துதல் காரணமாக கூறிய பொய்களின் அடிப்படையில் குற்றம்சாட்டுகின்றனர். உண்மை ஒருநாள் வெளிவரும் என நம்புகிறேன். தலைவர் என்ற முறையில் நமது விளையாட்டு மற்றும் வீரர்களுக்கு சேவை செய்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனினும் தற்போதைய சூழ்நிலையில், பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை நிர்வாகக் குழுவிற்கு தெரிவித்துள்ளேன்” என கபூர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு முன்னர், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன தலைவரோ, அலுவலகமோ எந்த கருத்தையும் வெளியிடாது என சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் அறிவித்த  நிலையில், கபூர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து