முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியில் சிக்ஸர் மழை பொழியும் அந்த்ரே ரஸல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பெங்களூர் : சிக்சர் மழை பொழிந்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரஸலை கட்டுப்படுத்த முடியாமல் பந்து வீச்சாளர்கள் திணறி வருகிறார்கள்.

ஐ.பி.எல். 2019 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வார்னர், பேர்ஸ்டோவ் ரன்கள் குவித்து வரும் வரும் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான அந்த்ரே ரஸல் சிக்சர் மழை பொழிந்து வருகிறார்.

அவர் இதுவரை ஆடியுள்ள நான்கு போட்டிகளில் பேட்டிங் செய்ய களம் இறங்கி 77 பந்துகளில் 207 ரன்கள் அடித்துள்ளார். இதில் 22 சிக்சர்கள் அடங்கும். 12 பவுண்டரிகள் அடங்கும். இரண்டு முறை நாட்அவுட். அவரது சராசரி 103.5 ஆகும். ஸ்டிரைக் ரேட் 268.83 ஆகும். சிக்சர் மட்டும் பவுண்டரி மூலமாகவே 180 ரன்கள் குவித்துள்ளார்.

அவருக்கு அடித்தபடியாக அதே அணியின் நிதிஷ் ராணா 12 சிக்சர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 11 சிக்சர்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல், பேர்ஸ்டோவ், வார்னர் தலா 10 சிக்சர்கள் அடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து