முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் பதவியில் விராட் கோலி இன்னும் அப்ரன்டிஸ்தான்: காம்பிர்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன், ஆர்.சி.பி.-யில் தொடர்ந்து கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை. டோனி, ரோகித் சர்மா தலா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அவர்களுடன் விராட் கோலியை ஒப்பிட இயலாது. இன்னும் கேப்டன் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை அவரை ஆர்.சி.பி கேப்டனாக வைத்திருப்பதால், அவர் அணிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கவுதம் காம்பிர் கூறியிருந்தார்.

இது குறித்து விராட் கோலியிடம் கேட்டபோது, வெளியில் உள்ள நபர்கள் கூறியதை கருத்தில் கொண்டால், நான் வீட்டில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றார். இந்த சீசனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐந்து போட்டிகளிலும் ஆர்.சி.பி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் கேப்டன் பதவியில் விராட் கோலி இன்னும் அப்ரன்டிஸ்தான் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில், பேட்ஸ்மேன் என்பதில் விராட் மாஸ்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கேப்டன் பதவியில் அவர் அப்ரன்டிஸ். அவர் இன்னும் ஏராளமாக கற்றுக் கொள்ள வேண்டும். பந்து வீச்சாளர்கள் மீது சாடுவதை விட்டு விட்டு, தோல்விக்கு காரணத்தை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.அவர்கள் எங்கே சறுக்கினார்கள் என்பது நான் எடுத்துக் கூறுகிறேன்.

தொடர் தொடங்கும் போது மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் கவுல்டர் - நைல் ஆகியோரால் விளையாட முடியாது என்பது தெரிந்தும், ஏன் அவர்களை தேர்வு செய்தார்கள். பிளாட் ஆடுகளமான சின்னசாமி மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுடன் முழு பலத்தில் களம் இறங்க வேண்டும்.

கொல்கத்தாவுக்கு எதிராக சிராஜ் பந்து வீச முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸை பந்து வீச கோலி அழைத்தார். அதற்குப் பதிலாக பவன் நெஹியை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஆடுகளத்தில் கிரிப்பிங் இருந்தது. ரஸல் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்வார் என்பதை தெரிந்து கொள்ள பெரிய மூளை தேவையில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து