முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்

செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வருமான வரித் துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்கட்சி தலைவர்கள் வீடுகளிலும், நிறுவனங்களிலும் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகள் குறித்து காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து வருவாய் செயலாளர் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ஆகியோர் இந்த சோதனை குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. வருவாய் செயலாளர் ஏ.பி. பாண்டே மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பி.சி. மோடி ஆகியோர் இந்த சோதனைகளின் முழு விவரங்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து