பெண்கள் ஹாக்கி தொடர்: மலேசியாவை 1-0 கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      விளையாட்டு
Indian Women team Win 2019 04 11

கோலாலம்பூர் : இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

3-வது ஆட்டம்...

இந்திய பெண்கள் ஹாக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 3-0, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  3-வது ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தொடரை வென்றது...

இந்த நிலையில் இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. லால்ரெம்சியாமி 55-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து