முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலில் முதல் முறையாக அதிக தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க.

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, பாரதிய ஜனதா கட்சி இதுவரை இல்லாத அளவில் பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு தேசிய கட்சிகளும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளையும் விட்டு கொடுத்துள்ளன. இதற்கிடையே பாராளுமன்றத்தில் 272 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கை பா.ஜ.க.வும், காங்கிரசும் கொண்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சுமார் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால் பாரதீய ஜனதா கட்சி அதையும் விட அதிகமான இடங்களில் களம் இறங்கி உள்ளது.

இதுவரை பா.ஜ.க. சார்பில் 408 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 135 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். பா.ஜ.க. இன்னும் 30 முதல் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும் போது பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 440-ஐ எட்டும். பா.ஜ.க. வரலாற்றில் இவ்வளவு அதிக தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து