நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதியதில் 2 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      உலகம்
helicopter-crashed-plane 2019 04 14

காத்மண்டு, நேபாளத்தில் விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

நேபாள நாட்டில் உள்ள டென்சிங் - ஹிலாரி - லுக்லா விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து இறங்கியுள்ளது. ஆனால் அது நிற்பதற்கு பதிலாக அங்கிருந்த ஹெலிகாப்டர் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். விமானம் விபத்திற்குள்ளான சம்பவம் பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து