ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      தமிழகம்
OPS -petti 2019 04 15

தேனி, அவதூறு செய்திகளை பரப்புவதாக தேனி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தவறான தகவல்களை பரப்பும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும். தி வீக் பத்திரிகையை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தி.மு.க. கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும். அவதூறு செய்திகளை பரப்புவதாக தேனி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து