முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டு வழங்கும் பணி துவக்கம்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்,- விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் இல்லத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம் ; மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு  நேரில் சென்று வழங்கப்பட்டது.
 விருதுநகர் மாவட்டத்தில், நடைபெறவுள்ள 34.விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019 மற்றும் 204.சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல்களை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 15,89,416 வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 202 இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,29,624 வாக்காளர்களும், 203 திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,37,757 வாக்காளர்களும், 204 சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,36,696 வாக்காளர்களும், 205 சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 2,46,355 வாக்காளர்களும், 206 விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 2,12,106 வாக்காளர்களும், 207 அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2,14,134 வாக்காளர்களும், 208 திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 2,12,744 வாக்காளர்களும் ஆக மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு 15,89,416 வாக்காளர்களுக்கும்  தேர்தலில் வாக்களிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டுகளை வாக்கு சாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாக விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 வாக்காளர் அடையாள சீட்டினை வாக்காளரிடமோ அல்லது குடும்பத்திலுள்ள மூத்த உறுப்பினர்களிடம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்காளர் அடையாள சீட்டு வழங்கியதற்கான ஒப்புகைப் பதிவேட்டில் பெறப்படும். வாக்காளர் அடையாள சீட்டினை ஒவ்வொரு நாளும் எந்த பகுதி , தெருவில் வசிக்கும் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்பது குறித்து முன்கூட்டியே அப்பகுதி, வாக்காளர்கள், சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் அடையாள சீட்டினை விநியோகம் செய்து வருகின்றனர். இப்பணி அந்தந்த சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.
 மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும். தங்கள் பெயர் மற்றும் புகைப்படம் உள்ள வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்தியஃமாநில அரசுகளில் பணிபுரியும் பணியாளர் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம், மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் அட்டை, ஓய்வூதிய ஆவணம், அலுவலக அடையாள அட்டை என 11 விதமான அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
வாக்காளர்கள் அடையாள சீட்டு விநியோகம் தொடர்பாக புகார்கள் ஏதும் தெரிவிக்க விரும்பினால் 1800 425 2166 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04562-1950 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து