முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 12 மாநிலங்களில் 95 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 12 மாநிலங்களில் 95 பாராளுமன்ற தொகுதிகளில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவையொட்டி  உள்ளூர் போலீசாருடன் மத்திய படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள  97 தொகுதிகளில் நேற்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. ஆனால் தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதி தேர்தல், பண பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

திரிபுரா மாநிலத்தில் திரிபுரா (கிழக்கு) தொகுதியில் சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி தேர்தல், 3-வது கட்டத்துக்கு (வரும் 23-ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று 12 மாநிலங்களில் 95 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் 38, புதுச்சேரியில் 1, கர்நாடகத்தில் 14, மராட்டியத்தில் 10, உத்தரபிரதேசத்தில் 8, அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5, சத்தீஷ்கர் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்தது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தலும், ஒடிசா சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 35 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது.

இந்த 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்  உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர்கள் ஜூவல் ஓரம், சதானந்த கவுடா, பொன் ராதாகிருஷ்ணன், நடிகை ஹேமமாலினி, நடிகர் ராஜ்பப்பர், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீஸ் படையுடன், மத்திய படைகளும் ஈடுபட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து