முதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      உலகம்
oldman car crash 2019 04 20

டோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.

ஜப்பானில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். பாதசாரிகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்நிலையில் டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது பாய்ந்தது. இதில் ஒரு பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர். அவர்களின் மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மோதிய கார் அங்கிருந்த குப்பைத்தொட்டியில் பாய்ந்து நின்றது. காரை ஓட்டி வந்த முதியவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து