மான்ட்கார்லோ டென்னிஸ் - அரையிறுதி போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      விளையாட்டு
Nadal 2019 04 21

மான்ட்கார்லோ:  மொனாக்கோவில் நடைபெற்று வரும் மான்ட்கார்லோ டென்னிசின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், இத்தாலி வீரர் பாபியோ போக்னினியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரும், 11 முறை சாம்பியனுமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடாலும், உலகின் 18-ம் நிலை வீரரான இத்தாலி நாட்டை சேர்ந்த பாபியோ போக்னினிய்ம் மோதினர். இந்த போட்டியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ரபேல் நடால் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார். இதேபோல் நேற்று நடந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் துசான் லாஜோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்டில் டேனில் மெட்விடெவை (ரஷியா) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து