அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு குடைச்சல் எதிரொலி: கனடாவிற்கு ஷிப்ட்டாகும் இந்திய ஐ.டி ஊழியர்கள்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      உலகம்
canada IT staff 2019 04 24

டொரான்டோ:  அமெரிக்க அரசு எச்-1பி விசா விவகாரத்தில், மிகுந்த கறார், காட்டுவதால் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலரின் பார்வை, கனடா நாடு பக்கமாக திரும்ப ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, 'அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை' என்ற கொள்கையைக் கொண்டு வந்தார். இதன் காரணமாக வெளிநாட்டினருக்கு, அமெரிக்காவில் குடியுரிமையில் முன்னுரிமை வழங்கக்கூடிய, எச்-1பி விசா விதிகளில் பல்வேறு கெடுபிடிகளை அமல்படுத்தினார்.  டொனால்ட்  ட்ரம்ப்.

ஆண்டுக்கு 85,000 எச்-1பி விசாக்களை, அமெரிக்கா வழங்கி வருகிறது. இதில் பெரும்பான்மையான விசாக்களை பெறுவது இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்தான். ஆனால் டொனால்டு டிரம்ப் அரசின், புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.  "ஆண்டவன் ஒரு கதவை அடைத்தால், இன்னொரு கதவைத் திறப்பான்" என்பது பழமொழி. அது இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் பொருந்தக்கூடிய பழமொழிதான் போலும். ஏனெனில் அமெரிக்கா கதவை சாத்தினாலும், கனடா இருகரம் கூப்பி இந்தியர்களை வரவேற்கிறது என்று தான் சொல்லவேண்டும். கனடா நாட்டில் உலகளாவிய திறமை ஸ்ட்ராட்டர்ஜி  என்ற பெயரில், 2017 ஆம் ஆண்டில் ஒரு செயல் திட்டம் அந்த நாட்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. இது, இந்தியர்களுக்கு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கனடா நாட்டின் இந்த புதிய திட்டத்தின்படி, 2018 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு, நிரந்தர குடியுரிமை கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல, 2019 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கனடா அரசு முன் வந்துள்ளது. இதன் காரணமாக, இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கனடாவை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்ப தொடங்கியுள்ளனர். 

ஸ்டேக்ரேப்ட், நிறுவனத்தின் நிறுவனர் வர்திகா மானஸ்வி, இது பற்றி கூறுகையில், அமெரிக்காவில் பணியாற்றி விட்டு கனடாவுக்கு குடிபெயர விரும்புவோரின் விண்ணப்பங்களுக்கு, வேகமாக முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றுள்ள இந்தியர்களும் கூட, கனடா நாட்டுக்கு செல்வதற்கு விரும்புகிறார்கள். அமெரிக்காவிலிருந்து கனடா செல்ல கூடிய எச்-1 பி விசாதாரர்களில், மூன்றில் ஒரு பங்கினர், இந்தியர்கள் என்றார். 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து